கரும்பு லாரி மோதி தனியார் பேருந்து விபத்து

by Staff / 26-09-2022 12:47:47pm
 கரும்பு லாரி மோதி தனியார் பேருந்து விபத்து

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையத்தில் என்ற இடத்தில் கரும்பு லாரி மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதாரம் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி தப்பித்தார்கள். நெடுஞ்சாலைத்துறை கவனத்திற்கு சாலைபுதூரிலிருந்து நொய்யல் வரை உள்ள சாலையில் அதிக விபத்துகள் நடந்து வருகின்றன , அதிகம் போக்குவரத்து நெரிசல் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உள்ள பகுதி , அதிகப்படியான விபத்து நேற்று புதுமணத்தம்பதிகள் சென்ற கார் விபத்துக்குள்ளானது , இன்று தனியார் பேருந்து விபத்து , இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்குள்ளாகி இச்சாலையில் இறந்தவர்களும் உண்டு , அந்த சாலையை விரிவுபடுத்தி நடுவில் தடுப்பு வைத்து சரியான முறையில் பாதுகாக்கபடவில்லை என்றால் மேற்கொண்டு விபத்து நடந்து கொண்டே தான் இருக்கும் என பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் கூறிவருகிறார்கள் , நெடுஞ்சாலைத்துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு சாலையை சரி செய்து உயிர்களை காப்பாற்றுமா? என கேள்வி எழும்பியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo