தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பள்ளியின் தாளாளர் கணவர் பாலியல் தொல்லை.மறியல் பதட்டம்.

திருச்சி மாவட்டம். மணப்பாறையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் தாளாளராக இருப்பவர் சுதா . இவரது கணவர் வசந்த் .இவர் இப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, மாலையில் தன்னை அழைத்து செல்ல வந்திருந்த தனது பெற்றோரிடம் அம்மாணவி கூறி அழுதுள்ளார். உடனடியாக ,பள்ளிக்குள் சென்ற பெற்றோர் வசந்தை விசாரித்ததோடு, மணப்பாறை போலீசுக்கும் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் வசந்தை பிடித்து தீவிர விசாரணை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வசந்த் பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு சென்று மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சியையும் போலீசார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மனைவி பள்ளியின் தாளாளர் என்பதால் எப்போதும் ஆசிரியை களின் அனுமதியின்றி வகுப்பறைக்கு சென்று தொடர்பந்து பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் வசந்த் ஈடுபட்டு வந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காலையில் பழைய பாளையம் ஆதிதிராவிட பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் நாகராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது இப்பகுதி பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
.
பள்ளிக்குள் புகுந்து தாக்குதல். கார்கள் அலுவலகங்கள் மீது கல்வீச்சு தாக்குதல்.கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்.
பள்ளியின் தாளாளர், உள்பட மேலும் 4 நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் - திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல். போக்குவரத்து மாதிப்பால் அணிவகுத்து நிற்கும் கார் - பஸ் உள்ளிட்ட வாகனங்கள். பயணிகள் அவதி.
Tags : தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பள்ளியின் தாளாளர் கணவர் பாலியல் தொல்லை.மறியல் பதட்டம்.