ஜாமீன் கிடைத்த உடனே   கைது செய்யப்பட்ட  ‘சாட்டை’ துரைமுருகன்

by Editor / 15-06-2021 04:37:01pm
 ஜாமீன் கிடைத்த உடனே   கைது செய்யப்பட்ட  ‘சாட்டை’ துரைமுருகன்


 யூடியூபர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் திருச்சியை சேர்ந்த கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட நிலையில்  அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால் அதே நேரத்தில் ஜாமின் கிடைத்தும், வெளிவர முடியாத வகையில் அவர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் உதிரி கடைக்காரரை மிரட்டிய வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என சாட்டை துரைமுருகன் திருச்சி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால் அவர் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து தவறான கருத்துக்களை பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதால் முந்தைய வழக்கில் ஜாமீன் கிடைத்தும் தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

Tags :

Share via

More stories

Logo