ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்;தமிழக அரசுமுடிவு 

by Editor / 19-06-2021 08:47:06pm
 ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்;தமிழக அரசுமுடிவு 

 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் ஜூலை 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ளதால், மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் இல்லை என அறிவிக்கப்படலாம். வழிபாட்டு தல ங்களை திறக்க அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

Tags :

Share via