சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் திவாகரனின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும் அவருக்கு வேறு ஏதாவது இணை நோய்கள் இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட திவாகனின் உடல்நிலை குறித்த அறிக்கையை போரூர் தனியார் மருத்துவமனை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே சிறையில் இருந்து விடுதலை ஆகும் நேரத்தில் சசிகலாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
Tags :