மதுரை-துபாய் விமானம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

by Editor / 25-06-2021 09:54:17am
மதுரை-துபாய் விமானம்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததை அடுத்து கூடுதலாக விமானங்களை இயக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மதுரையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்த அறிவிப்பை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை துவங்குகிறது என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது இரண்டாவது அலையால் மதுரை-துபாய் நேரடி விமானம் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த விமானம் செவ்வாய்க்கிழமை தவிர தினமும் 11:40 வாரம் முழுவதும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo