சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக தரிசன நேரம் அதிகரிப்பு.

சபரிமலையில் தற்பொழுது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.நாடெங்கிலுமிருந்து ஐயப்ப பக்தர்களின் கூட்டம் இருந்து சபரிமலை நோக்கி அய்யப்ப பக்தர்களின் கூட்டம் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா பெரும் தொற்றுக்குப் பிறகு சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக சபரிமலையில் கூட்டம் அதிகரிப்பை தொடர்ந்து தரிசன நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தினமும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும் நடை இன்று முதல் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.மேலும் சபரிமலையில் காலை 4மணி முதல் பகல் 1மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் என்றும் பக்தர்கள் இனி தரிசனம் செய்யலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags :