வெளியானது சசிகலாவின் அடுத்த ஆடியோ 

by Editor / 26-06-2021 04:08:58pm
 வெளியானது சசிகலாவின் அடுத்த ஆடியோ 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கையிலெடுத்துள்ளார். இதை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக தொண்டர்களிடம் பேசி, அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியைச் சேர்ந்த பெரிய ராஜ் என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், "கட்சி வளர வேர்கள்போல் காரணமாக இருக்கும் தொண்டர்களை மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு நீக்குவது தவறு.தொண்டர்களின் தியாகத்தினால்தான் கட்சி மாபெரும் சக்தியாக உள்ளது. தொண்டர்களை நீக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக நான் வருவேன். அம்மா போல நானும் கட்சியை வழி நடத்துவேன். தொண்டர்களின் ஆதரவோடு அதை செய்வேன்" என்று கூறியுள்ளார்
 

 

Tags :

Share via

More stories