சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

by Staff / 20-12-2022 05:15:24pm
சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூரில் EID parry சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. ஆலை சுற்றி உள்ள புகலூர் நால்ரோடு, தோட்டக்குறிச்சி, செம்படாபாளையம், வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் சக்கரை ஆலையிலிருந்து வெளிவரும் புகையில் கரி துகள்கள் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் விழுவதால் பாதிப்ப ஏற்படுகிறது. ஆலையிலிருந்து வெளிவரும் கரி தூள்கள் வீடுகளில் விழுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆஸ்துமா சளி காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படுகிறது. அதேபோல் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு நீர் இரவு நேரங்களில் வாய்க்கால்களில் கலப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பல முறை ஆலை நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரித்திடமும் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதனால் இன்று புகழூர் சர்க்கரை ஆலையின் கரும்பு வாகனங்கள் நுழைவு வாயிலின் முன்பு 200 க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via