கோவைமாவட்ட கல்வித்துறையில் புதிய முயற்சி

by Editor / 21-12-2022 10:03:40am
கோவைமாவட்ட கல்வித்துறையில் புதிய முயற்சி

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலர்களின் நிர்வாக முறைகளை முழுமையாக கணினி வழியே புகுத்த பள்ளி கல்வித்துறை ஆணையரகம் முயற்சித்து வருகிறது. இதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில், 232 நடுநிலை பள்ளிகள், 83 உயர்நிலை பள்ளிகள், 113 மேல்நிலை பள்ளிகள் என, 428 பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியே வினாத்தாள் அனுப்பி, அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ஆன்லைன் வகை வினாத்தாளை,மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories