சீனாவுடனான போக்குவரத்து ரத்து இல்லை
சீனாவில் கடுமையாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவின் உருமாறிய வகையான பிஎஃப்7 தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 4 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சீனாவுடனான போக்குவரத்து ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, சீனாவுடனான நேரடி விமானங்கள் எதுவும் இல்லை என்றும், இணைப்பு விமானங்கள் சேவையை நிறுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
Tags :