ஓ. பன்னீர்செல்வத்துடன் மு. க. ஸ்டாலின் சந்திப்பு

by Staff / 17-03-2023 04:14:35pm
ஓ. பன்னீர்செல்வத்துடன் மு. க. ஸ்டாலின் சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி காலமானார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அந்த இரங்கல் செய்தியில், "முன்னாள் முதல்வர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், இன்று (மார்ச் 17) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, அவரது தயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

 

Tags :

Share via
Logo