வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

by Staff / 06-04-2023 02:50:58pm
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

கோவை பீளமேடு எஸ். டி. வி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (38 ). இவர் டிசைனிங் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (52) என்பவர் வசித்து வருகிறார்.
நேற்று விக்னேஷ் கடை ஏற்றும் முன்பு சுந்தர்ராஜன் குப்பை மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்களை போட்டு சென்று விட்டதாக தெரிகிறது இது தொடர்பாக விக்னேஷ் அவரிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.கோபம் அடைந்த சுந்தர்ராஜன் விக்னேசை தாக்கி தன்னிடம் இருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜன் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories