விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட்

by Staff / 22-04-2023 03:25:47pm
விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் சிங்கப்பூரின் 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-2 மற்றும் 16 கிலோ எடையுள்ள லூம்லைட்-4 ஆகிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிடப்பட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் தாமதாக கிளம்பியது. இஸ்ரோ மற்றும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து இந்த சோதனையை நடத்தின. பிஎஸ்எல்வி வகை ராக்கெட் ஏவப்படுவது இது 57வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo