அமைச்சரவையிலிருந்து நாசர் நீக்கம்: டி.ஆர்.பி.ராஜா அமைச்சர்.

by Admin / 09-05-2023 10:25:40pm
அமைச்சரவையிலிருந்து நாசர் நீக்கம்: டி.ஆர்.பி.ராஜா அமைச்சர்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநரின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி மே 11 ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி ராஜா அமைச்சராவதன் மூலம் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. அமைச்சராகப் போகும் டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடி தொகுதியில் மூன்று முறை வென்றவர் என்பதும், தற்போது திமுக ஐடி விங் செயலாளராக பணியாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo