கர்நாடக சட்டமன்றத்திற்கு ஒரு மணி வரையிலான வாக்குப்பதிவு 37.25 சதவீதம்

by Admin / 10-05-2023 03:24:32pm
கர்நாடக சட்டமன்றத்திற்கு ஒரு மணி வரையிலான வாக்குப்பதிவு 37.25 சதவீதம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவு பெறுகிறது 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு. வரும் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் .5 கோடியே 31 லட்சத்தி 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் கொண்ட கர்நாடக மாநில சட்டமன்ற வாக்காளர்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் உள்ளன .மும்முனை போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 113 இடங்களை கைப்பற்று அவர்கள் ஆட்சியை அமைக்கக்கூடிய நிலையை பெறுவார்கள் . காலை வாக்குப்பதிவிற்கு முன்னதாக கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஜிஹாவ்ன் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் வாக்களிப்பு முன்பாக ஹிப்பாலி ஹனுமான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் .முன்னாள் முதல்வர் எடியூரப்பா ,ஹிச்சறாயா கோவிலுக்கு சென்று வழிபட்டார் .அதற்கு பின்பு தன்னுடைய  மகன் போட்டியிடும் ஜிகாரிபுரா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தம் வாக்கினை செலுத்தினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில்  உள்ள ஜெயா நகரில் தன் வாக்கை செலுத்தினார். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் தன்னுடைய வாழ்க்கை பதிவு  செய்தார். மும்முனை போட்டியில் உள்ள  கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க போகிறது என்பது  வரும் 13-ஆம் தேதி தெரிந்து விடும்.

 இதுவரை கர்நாடக  சட்டமன்றத்திற்கு அதாவது ஒரு மணி வரையிலான வாக்குப்பதிவு 37.25 சதவீதம் நடந்திருக்கிறதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உடுப்பியில் அதிகபடசமாக 47.79 சதவீதம் வாக்குப்பதிவு  நடந்திருப்பதாகவும்  நகர்  பகுதியில்குறைந்த பட்சமாகவும்  29.41 சதவீதத்தில் வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல்.

 

Tags :

Share via