புதைக்கப்பட்ட இளம்பெண் 3 மாத கர்ப்பம்

விழுப்புரம் மாவட்டம் சாலவனூர் சுடுகாட்டு பகுதியிலுள்ள ஏரியில் 6ஆம் தேதி பள்ளம்தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது இளம்பெண் ஒருவர், கொன்று புதைக்கப்பட்டிருந்தார். அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது, 25 வயதுடைய அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் என்பதும், உடல் சரியாக அடக்கம் செய்யப்படாமல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது. கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண் 3 மாத கர்ப்பமாக இருந்ததும், திருமணமாகாமல் கர்ப்பமானதால் யாரோ கொலை செய்து உடலை புதைத்திருப்பதும் தெரியவந்தது.
Tags :