பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 விழுக்காடு பெற்று முதலிடம் பிடித்துள்ளது .
இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தின் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் ஒன்பது லட்சத்து 14 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர் இதில் 91.39 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் உடைய தேர்ச்சி விகிதம் 94.66 விழுக்காடு மாணவர்கள் 88 புள்ளி 16 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன .இது மாணவர்களை விட ஆறு புள்ளி 50 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடத்திலும் நூறு விழுக்காடு மதிப்பின் பெற்ற விபரம் தமிழில் எந்த பள்ளியும் மாணவர்களும் 100 விழுக்காடு மதிப்பெண்ணை பெறவில்லை. 100% தேர்ச்சி பெற்றிருக்கக் கூடிய பள்ளிகள் 3718 ஆகும். மாநில அளவில், பெரம்பலூர் மாவட்டம் தொன்னுத்தி ஏழு புள்ளி ஆறு ஏழு விழுக்காடு பெற்று முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 விழுக்காடு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 96.22 விழுக்காடு பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீதம் பெற்று கடைசி இடம் பிடித்துள்ளது கணித பாடத்தில் நூறு விழுக்காடு பெற்ற மாணவர்கள் 3649 பேரும் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் 3 ஆயிரத்து 584 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் நூறு விழுக்காடு பெற்ற மாணவர்கள் 320 பேர் ஆங்கிலத்தில் நூறு மதிப்பெண் பெற்றவர்கள் 89 பேர் வெற்றி பெற்றவர்களில் .மாற்றுத்திறனாளிகள் 973 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்வு எழுதியவர்கள் 10 ஆயிரத்து 88 பேர் சிறை கைதிகளாக உள்ளோர் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்வு எழுதியவர்கள் 264 பேர்.
Tags :