மக்காத கழிவுகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்-2 ஓட்டுனர்கள் கைது.

by Editor / 23-05-2023 12:10:01am
மக்காத கழிவுகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்-2 ஓட்டுனர்கள் கைது.

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தினம் தோறும்  கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன சில வாகனங்கள் திருப்பி அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் நேற்று 21 ஆம் தேதி இரவு தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடி வழியாக கேரளாவில் சிமெண்ட்  இறக்கி விட்டு வந்த இரண்டு டாரஸ் லாரிகளை போலீசார் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்ததால் மறித்து சோதனை செய்தனர் அப்பொழுது அந்த லாரியில் மக்காத நெகிழி டன் கணக்கில் லோடு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புளியரை போலீசார்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் ஜெபா புளியரைக்கு வந்து இரண்டு லாரிகளையும் சோதனை செய்தார் அதில் மக்காத நெகிழிகள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டு அவர் புளியரை போலீசில் புகார் செய்தார் அவரது புகாரை தொடர்ந்து புளியரை போலீசார் திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் கவுதம் என்ற ஓட்டுநர் மீதும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் சகாயராஜ் மகன் ஜான் பீட்டர் ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து,இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மக்காத கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு ஓட்டுனர்களை கைது செய்து லாரிகளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags :

Share via