by Editor /
25-06-2023
09:33:12pm
தமிழக காவல்துறையின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள மதுரை,தூத்துக்குடி,விருதுநகர்,நெல்லை, தென்காசி,உள்ளிட்ட 10 மாவட்டங்களில், கடந்த 5 மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்த 917 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஈடுபட்ட பல்வேறு கஞ்சா வியாபாரிகளின் 14 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 1316 நபர்களின் 2,448 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 5 மாதங்களில் 684 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via