தனிமை வாட்டியதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு சாஸ்திரிநகர் திருவள்ளுவர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். லாரி டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு மயிலானந்த் என்ற மகனும் உள்ளனர் மயிலானந்த் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு மயிலானந்த் மனஉளைச்சலுடன் இருந்து வந்தார். அவரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்ததால், அவருக்கு செந்தில்குமாரும், ரூபிஸ்ரீயும் ஆறுதல் கூறி வந்தனர். இதனால் செந்தில்குமார் வேலைக்கு சென்ற பிறகு மயிலானந்த் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்றார். மயிலானந்த் வீட்டில் தனிமையில் இருந்தபோது தனது அக்காள் ரூபிஸ்ரீக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அடிக்கடி தாய் ஞாபகம் வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி உள்ளார். அதற்கு அவர் ஐதராபாத்துக்கு சென்றுள்ள தந்தை வீட்டுக்கு திரும்பியதும் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறினார். அதன்பிறகு மாலையில் மயிலானந்தின் செல்போனுக்கு ரூபிஸ்ரீ செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் செல்போன் அழைப்பை எடுக்காததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரிடம் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மயிலானந்த் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மயிலானந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மயிலானந் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Tags :