லிபியா வெள்ளம்: 20,000 பேர் பலியாகி இருக்கலாம்

by Staff / 14-09-2023 03:42:22pm
லிபியா வெள்ளம்: 20,000 பேர் பலியாகி இருக்கலாம்

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என டேர்னா நகரின் மேயர் தெரிவித்துள்ளார். கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இருந்து அதிகமான சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது இரண்டு அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன. வெள்ள பாதிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கின்றன.

 

Tags :

Share via