செண்பக கால்வாய் அணை தடுப்பு சுவர் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உறுதி

by Editor / 15-09-2023 11:21:56pm
செண்பக கால்வாய் அணை தடுப்பு சுவர் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உறுதி

தென்காசி மாவட்டம்   வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதில் அமைந்துள்ள செண்பக கால்வாய் அணை தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் வாசுதேவநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டின் மலை வளங்கள் மிகப்பெரிய பொக்கி~ங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் தொடங்கி நீலகிரி மாவட்டம் வரை 1500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை நமக்கு மிகப்பெரிய பொக்கி~மாகும். இது தமிழக எல்லையாகவும் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை பொழிவை கொடுக்கும் பகுதியாகவும் விளங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 30 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் ஆண்டுதோறும் மழை பெய்வதன் மூலம் கிடைக்கிறது. இது பெரிய அளவில் அரபிக் கடலில் கலக்கிறது. தமிழக நிலங்களை அது வளப்படுத்தவில்லை. மலை பகுதியில் உள்ள முகடு பகுதி மாநில எல்லையாக பிரிக்கப்படும். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் சர்வதேச அளவீடு பயன்படுத்தப்படவில்லை. பெரும்பகுதி கேரளாவிற்கு சென்று விட்டது. 
சிவகிரி அருகே வாசுதேவநல்லூர் மேற்கே மிக குறைந்த செலவில் கட்டப்பட்டதுதான் செண்பக கால்வாய் அணை பகுதி. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ராஜசிங்கபேரி, குலசேகரப்பேரி கால்வாய் என இரண்டாக பிரிகிறது. வறட்சியான காலத்திலும் இதில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணை கட்டில் 20 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரத்தில் இருந்தது. இது இடிந்து விட்டது. இதனால் இங்கு பெய்யும் மழை நீர் அரபிக்கடலுக்கு வீணாக சென்று கலக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. தண்ணீர் வந்தால் தென்காசி மாவட்டத்தின் பெரும் பகுதி வளம் பெறும். கயத்தாறு வரை தண்ணீர் பாசம் பெறும். தலையணை பகுதி சீர் செய்யப்பட வேண்டும். விரைவில் அப்பகுதிக்கு நான் சென்று பார்வையிடுவேன். சில கோடி ரூபாய் செலவில் செண்பக அணைக்கட்டு தடுப்புச் சுவர் சரி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். இதுகுறித்து கேரளா சென்று பேசுவேன் என்றார்.

செண்பக கால்வாய் அணை தடுப்பு சுவர் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உறுதி
 

Tags : புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசா

Share via