பள்ளி மாணவிகள் போராட்டம்:தலைமை ஆசிரியை இடமாற்றம்.

by Editor / 07-10-2023 07:52:23am
 பள்ளி மாணவிகள் போராட்டம்:தலைமை ஆசிரியை இடமாற்றம்.

சேலம் கோட்டை மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீரில் புழு இருந்ததாக புகார் தெரிவித்த மாணவிகளை முட்டி போட வைத்ததை  கண்டித்தும், சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தர வலியுறுத்தியும் பள்ளி வளாகத்தில் மாணவிகள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள்,போலீசார் பேச்சவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர். இந்த நிலையில் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி அளித்திருந்தனர்.இந்த நிலையில் கோட்டை மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து சிஇஓ கபீர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :  பள்ளி மாணவிகள் போராட்டம்:தலைமை ஆசிரியை இடமாற்றம்.

Share via

More stories