யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த நபர் காருடன் கைது

by Editor / 09-10-2023 10:16:22pm
 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த நபர் காருடன் கைது

திருநெல்வேலி வனக்கோட்டம். தென்காசி மாவட்டம். கடையநல்லூர் வனச்சரக பணியாளர்கள், மதுரை மண்டல தமிழ்நாடு வகை பிரிவின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு, திருநெல்வேலி வனக்காவலர் நிலைய வனச்சரக அலுவலர் அடங்கிய குழுவினர். மத்திய வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு பணியாளர்கள். வனவிலங்கு குற்ற தடுப்பு ரேஞ்சர் லோகசுந்தரராஜன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேக்கரை பிரிவு வடகரை பீட்டிற்கு மேட்டுக்கால் ரோடு பொன்னாக்குடி கிராமம் குறவன் பாறை செல்லும் வழியில் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் கூட்டு ரோந்து பணியினை மேற்கொண்ட பொழுது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் காருடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் வடகரை ஜாகிர் உசேன் ஒன்றாவது தெருவை சேர்ந்த பீர்முகமது என்பதும் அவர் வனத்துறையினரின் கேள்விக்கு முன்னுக்கு பின்னாக பேசியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவரிடம் இருந்த காரில் வனத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது காரில் சனல் சாக்கில் இரண்டு யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக பீர்முகமதுவை பிடித்த வனத்துறையினர் கடையநல்லூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 யானை தந்தங்களையும்,அதனை கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். வடகரைப்பாகுதி மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியாக உள்ளதால் கேரளமாநிலத்திலிருந்து ஏராளமான யானைகள் இந்தபகுதிக்கு உணவைத்தேடி வருவது வழக்கம்.ஏற்கனவே அச்சன்கோவில் பகுதியில் யானை தந்தங்கள் கடந்து சில தினங்களுக்கு முன்பு பிடிபட்ட நிலையில் தற்போது வடகரை பகுதியில் யானைத்தந்தம் பிடிப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

 

Tags : Elephant tusks

Share via