இஸ்ரேல் உறவை முறித்துக் கொண்ட பஹ்ரைன்

by Staff / 03-11-2023 01:52:16pm
இஸ்ரேல் உறவை முறித்துக் கொண்ட பஹ்ரைன்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில நாட்களாக தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இஸ்ரேலுக்கான தூதரை திரும்ப பெற்ற பஹ்ரைன், இஸ்ரேல் உடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளது. பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் கூறியியுள்ளது. மேலும், வளைகுடா நாடான பஹ்ரைன் சமீபத்தில்தான் இஸ்ரேலுடனான தனது உறவைச் சுமூகமாக்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via