சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

by Editor / 14-11-2023 08:51:54am
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

கனமழை காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்துவருவதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

Share via

More stories