10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்
ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையில் மாற்றப்பட்ட மசோதா உள்ளிட்டவற்றை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியுள்ளது.
Tags :