மீட்பு பணியில் தாமதம் : ராமதாஸ் கண்டனம்

by Staff / 30-11-2023 04:59:50pm
மீட்பு பணியில் தாமதம் : ராமதாஸ் கண்டனம்

கனமழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வரும் நிலையில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், சாலைகள், வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது, மேலும் அரசு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo