7 ஐஐடி, 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

by Staff / 01-02-2024 11:57:05am
7 ஐஐடி, 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், 'ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது' என்றார்.

 

Tags :

Share via