பாஜக அரசு தமிழக மீனவர்களை பாதுகாத்திட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமால் செய்யும் தொடர்ச்சியான தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழக மீனவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று ஒரு சிறுதுரும்பைக் கூட அசைக்க மறுத்து தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழ் மக்கள் மீதான விரோதப் போக்கை கைவிட்டு மீனவர்களை பாதுகாத்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Tags : பாஜக அரசு தமிழக மீனவர்களை பாதுகாத்திட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி