காதலியின் அண்ணன் வெட்டிப் படுகொலை

by Staff / 09-02-2024 11:56:53am
காதலியின் அண்ணன் வெட்டிப் படுகொலை

புதுக்கோட்டை: அடப்பன் வயலைச் சேர்ந்தவர் உச்சி கார்த்திக் (25). இவரது தங்கையும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசனும் (29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கார்த்திக்கும், சீனிவாசனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்களுக்கிடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனிவாசன், நெருப்பு தினேஷ் (25) உள்ளிட்டோர் நேற்று கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருக்கோகர்ணம் போலீசார் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via