தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

by Editor / 18-02-2024 10:46:13am
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (திங்கள்கிழமை) காலை நடைபெறுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தவெக போட்டியிடாது என ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கை, நிலைபாடு, செயல்திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி அறிவிக்கப்படும்.

 

Tags : தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்.

Share via

More stories