சென்னைக்கு  அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக் சிக்கப்போவது யாரு...?

by Editor / 18-03-2024 10:03:09am
சென்னைக்கு  அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக் சிக்கப்போவது யாரு...?

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கிடும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸ்னஸில் முதலீடு செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில் ஜாபர் சாதிக் டெல்லியிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டு அயப்பாக்கத்தில் உள்ள என்சிபி அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சென்னைக்கு  அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக் சிக்கப்போவது யாரு...?

Share via
Logo