காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரத்து செய்-தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

by Admin / 25-03-2024 01:04:51am
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரத்து செய்-தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரத்து செய்து காங்கிரஸ்காக பாரம்பரியமாக உழைத்து வரும் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் இரா. ராமசுகந்தனுக்கு கிருஷ்ணகிரியில் எம்.பி. சீட் வழங்கிட கோரி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் அய்யலுச்சாமி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

கோவில்பட்டி பேருந்து நிலையம் எதிரேயுள்ள பிரதான சாலையில் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான அய்யலுச்சாமி தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரியில் 4 முறை தருமபுரி மற்றும் சேலத்தில் ஒரு முறையும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்காக பாரம்பரியமாக உழைத்து வரும் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் இரா. ராமசுகந்தனுக்கு சீட்டு வழங்காததை கண்டித்தும். தர்மபுரியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணியின் சகோதரர் விஷ்ணு பிரஷாத்திற்கு தொடர்ந்து கடலூரில், ஆரணி, என காங்கிரஸ் கட்சி சார்பில் சீட்டு வழங்கப்படுவதை கண்டித்தும்.

தொடர்ந்து ஒரு சிலருக்கு மட்டும் தொடந்து சீட் வழங்குவதைக் கண்டித்தும்.எம்.பி. சீட்டை பல கோடியில் விற்பனை செய்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியை கண்டித்தும்.காங்கிரஸ் கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களுக்கு சீட் வழங்கிட வலியுறுத்தியும். தற்போது வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலை ரத்து செய்து கட்சிக்காக உழைக்கும் உண்மையான காங்கிரஸ் பிரமுகர்களுக்கு வாய்பு வழங்கி புதிய பட்டியலை வெளியிடக் கோரியும், கோஷங்களை எழுப்பியவாறு தீ குளிக்க முயற்சித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியிணை தடுத்து நிறுத்தினர் இதனால் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரத்து செய்-தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
 

Tags :

Share via