பெண்களுக்கு எதிரான கட்சி தான் பா.ஜ.க -கனிமொழி கருணாநிதி

by Admin / 06-04-2024 09:17:48am
பெண்களுக்கு எதிரான கட்சி தான் பா.ஜ.க -கனிமொழி கருணாநிதி

பெண்களுக்கு எதிரான கட்சி தான் பாஜக - மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலை 100 ரூபாய் ஓட்டுக்காக குறைத்துள்ளார் அப்போ பெண்கள் என்றால் சமையலறையில் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறாரோ பிரதமர் மோடி  கனிமொழி பேச்சு..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ ஈரால், எட்டயபுரம், கடலையூர் ,தாப்பாத்தி ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர்  கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பேசுகையில். :

ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு எந்த நிதியும் கொடுப்பதில்லை ஆனால் வரியை மட்டும்  வாங்கிக் கொள்கின்றனர்..தமிழகத்துக்கு நிதியும் கொடுப்பதில்லை நிவாரணம் கொடுப்பதிஆனால் தமிழக முதல்வர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். பெண்களின் விடியல் பயணம்,மகளிர் உரிமைத் தொகை திட்டங்களை செய்துள்ளார்..இன்னும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத நபர்களுக்கு  வழங்கப்படும்..மோடி ஆட்சியில் 100 நாள் வேலை யாருக்கும் கொடுப்பதில்லை.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதியை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நூறு நாள் வேலையை திட்டத்தில் பயன்பெறும் மக்களை பற்றி கவலைப்படாமல் அவருடைய வாழ்க்கை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டம் என்பதாலே அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில்லைஇந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலை 150 ஆக மாற்றப்படும். சம்பளம் 400ரூபாயாக உயர்த்தப்படும்..பிரதமர் மோடி மகளிர் தினத்துக்கு கேஸ் விலையில் 100 ரூபாய் குறைத்தார் எதற்கு குறைத்தார் ஓட்டு வாங்குவதற்காக குறைத்தார்.ஆனால் மகளிர் என்றால் சிலிண்டர்தானா?பெண்கள் என்றால் சமையல் அறையில் தான் இருக்க வேண்டுமா?இதைத்தான் பிரதமர் மோடி நினைக்கிறார் மகளிர் தினத்திற்கு எத்தனையோ விஷயங்களை செய்யலாம் ஆனால் ஒரு அரசாங்கம் தேர்தலுக்காக கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பது என்றால் அப்போ பெண்கள் என்றால் சமையல் அறையில் இருக்க வேண்டும் படிக்கக்கூடாது வேலைக்கு செல்லக்கூடாது இதுதான் பெண்களுக்கு அவர்கள் தரும் மரியாதைஇந்த பிஜேபி ஆட்சியில் என்றுமே பெண்களுக்கு மரியாதை கிடையாது  பெண்களுக்கு பாதுகாப்பும் கிடையாது.

மணிப்பூரில் பாஜக கொளுத்தி போட்ட வெறுப்பால் இரண்டு இனக்குழுக்கள் அங்கு சண்டை போட்டுக் கொண்டு அங்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்அங்கு இரண்டு பெண்களுக்கு கொடுமைகள் நடைபெற்றது ஆனால் உலகம் முழுவதும் சுற்றக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி யால் அங்கு பாதிக்கப்பட்டு பெண்களையோ மக்களையோ பார்ப்பதற்கு மனசு வரலை பார்ப்பதற்கு நேரமும் கிடைக்கவில்லை ஆனால் இப்போது தேர்தல் வந்துவிட்டதால் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்.ஆனால் மக்கள் கஷ்டப்படும் போது அவருக்கு வருவதற்கு நேரம் இருக்காது..நிவாரணம் கொடுப்பதற்கு கூட மனசு வராது இதுதான் பாஜகவின் ஆட்சி இப்போது இருக்கக்கூடிய பிஜேபி 44 எம்பிக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள்  ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஜெயிக்க வைத்துள்ளனர் பாஜகவினர்இந்த பாஜக ஆட்சி அதானி, அம்பானிக்காகவும்,கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவும் நடக்கிறது இதில் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது .குற்றம் செய்தவர்கள் பாஜக வாஷிங் மெஷினிக்கு  வந்தால் புனிதர் ஆகிவிடுவார்கள் என கூறினார்.

 

பெண்களுக்கு எதிரான கட்சி தான் பா.ஜ.க -கனிமொழி கருணாநிதி
 

Tags :

Share via