ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல்.

by Editor / 01-05-2024 10:37:36pm
ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல்.

 மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் மதுபான  கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில்  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம்  ஏந்தூர் ஏரிக்கரை அருகே கள்ளத்தனமாக அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக  விழுப்புரம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் மத்திய நுண்ணறிவு  போலீசார் அந்தப் பகுதியில்  சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது  அந்தப் பகுதியில்  பார் நடத்தி வரும் விஜய் மற்றும் அவரது தந்தை தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் தமிழக அரசு மதுப்பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை கண்டவுடன் பார் உரிமையாளர் விஜய் தப்பி ஓடிய நிலையில் அவர்  தந்தை தக்ஷிணாமூர்த்தியை நுண்ணறிவு போலீசார் கைது செய்து பதுக்கிவைக்கப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான இருந்த 2 ஆயிரம்  மதுப்பாட்டில் களை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

 

Tags : ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல்.

Share via