யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை பாய்கிறது

by Staff / 21-05-2024 01:54:46pm
யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை பாய்கிறது

பிரபல யூடியூபர் இர்ஃபான் மீது காவல்துறை நடிவடிக்கை எடுக்க தயாராகி உள்ளது. யூடியூபர் இர்ஃபான் 4 மில்லியனுக்கும் அதிகமாக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள 'இர்ஃபான்ஸ் வியூ' என்ற சானலை நடத்தி வருகிறார். சுமார் 2,400-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்து முன்னணி யூடியூபராக வலம் வருகிறார். இர்ஃபானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துது. இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியுடன் துபாய் சென்றிருந்த அவர் அங்கு குழந்தையின் பாலினம் பற்றி அறிந்துள்ளார். தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் சமீபத்தில் அறிவித்த இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சட்டப்படி கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் பாலினத்தை தெரிந்துகொள்வது குற்றமாகும். அவர் வெளிநாட்டில் சென்று சோதனை செய்தாலும், இந்தியாவில் யூடியூப் சானல் நடத்தி வருபவர் என்பதால் நடவடிக்கை பாய்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo