திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்

by Staff / 03-06-2024 12:53:30pm
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 15 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo