5 ராணுவ வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்

by Staff / 29-06-2024 01:08:00pm
5 ராணுவ வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்

லடாக் நியோமா-சுஷூல் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மந்திர்மோர் அருகே ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், லடாக் விபத்தில் துணிச்சலான நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ‘தேசத்திற்கான வீரர்களின் முன்மாதிரியான சேவையை ஒருபோதும் மறக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo