தேனியில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை

by Staff / 05-07-2024 01:27:52pm
தேனியில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை

தேனி சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தோல் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த மணிமாலா, நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கணவர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இவர்களது 6 வயது ஆண் குழந்தை பரிதவித்து வருவதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via