வேளாங்கண்ணி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

by Staff / 25-08-2024 01:32:31pm
வேளாங்கண்ணி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினம்: உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா புனித பேராலய ஆண்டு திருவிழா வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் தாம்பரம் - வேளாங்கண்ணி (06119) இடையே வரும் 28ஆம் தேதியும், வேளாங்கண்ணி - தாம்பரம் (06120) இடையே 30ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இதில் மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

 

Tags :

Share via