ஆவினில் தொடரும் மோசடி குறித்தான அதிர்ச்சி

by Staff / 02-09-2024 01:57:25pm
ஆவினில் தொடரும் மோசடி குறித்தான அதிர்ச்சி

மதுரை மாவட்டம் கோப்பம்பட்டி பால் உற்பத்தி மையத்திலிருந்து ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படும் பால்கேன்களில் ஓட்டுநர் தண்ணீரை கலப்படம் செய்யும் சம்பவத்தினை அந்த பகுதியில் இருந்த ஆவின் விரிவாக்க அலுவலர் கையும் களவுமாக பிடித்து பிடித்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக ஆவின் விரிவாக்க அலுவலர் ஒருவர் ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.ஆவின் பால்பண்ணை லாரியிலிருந்து டீசல் திருடப்படுவதும் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது தொடர்பான முழு வீடியோக்களையும் உரிய விளக்கத்தோடு பதிவிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தனக்கான ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார.

இதுபோன்ற புகார்கள் தொடர்பாக பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்களுக்கு மீதான நடவடிக்கை எடுக்காமல் இது போன்ற முறைகேடுகளை வெளிக் கொண்டுவந்த என் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories