பதில்சொல்வாரா...?விஜய் எதிர்பார்ப்பில் தொண்டர்கள்..

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு முடிந்தநிலையில் பல்வேறு அரசியல்கட்சியினர் விஜய்க்கு ஆதரவாகவும்,எதிராகவும் முழக்கமிட்டுவருகின்றனர்.இதெற்கெல்லாம் ஒருபடி மேலே போய் நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.இந்தநிலையில்
சென்னை பனையூரில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில், 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் செயல் திட்டங்கள்மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்த நிலையில், இன்று (நவ.3) கட்சியின் உட்கட்டமைப்பு விவகாரங்கள் பற்றி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த கூட்ட்டத்த்தில் விஜய் சீமான் உள்ளிட்டோருக்கு பதிலளிக்கும் வண்ணம் கருத்துக்களை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : பதில்சொல்வாரா...?விஜய் எதிர்பார்ப்பில் தொண்டர்கள்..