மகா கும்பமேளாவில் 15,000 பேர் மாயம் - MP பரபரப்பு குற்றச்சாட்டு
உ.பி: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ராம் கோபால் யாதவ், "யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகம் VIP-களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மும்முரமாக உள்ளது. ஆனால், சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. இதுவரை 15,000 பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதுகுறித்து அரசாங்கம் எந்த தகவலையும் வழங்கவில்லை" என்று பேட்டியளித்துள்ளார்.
Tags :