இன்னோவா காரில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  வட மாநில நவீன கொள்ளையன் ஆலங்குளம் போலீஸாரால் கைது.

by Editor / 07-02-2025 11:30:24pm
இன்னோவா காரில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  வட மாநில நவீன கொள்ளையன் ஆலங்குளம் போலீஸாரால் கைது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இரு நிதி நிறுவனங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு காவலர்கள் பல கட்ட தீவிர விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் 53 வயது அசோக் ஜோஸி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மும்பை விரைந்த ஆலங்குளம் குற்றப்பிரிவு போலீசார் சொகுசு காரில் சுற்றித்திரிந்த அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் குற்ற செயலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அவர் ஆலங்குளம் கொண்டுவரப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
  இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:   ஹைடெக் உபகரணங்களான செல்போன் ஜாமர் கருவி, ஹைட்ராலிக் கட்டர் மற்றும் இன்னோவா காரில் வந்து கொள்ளையடித்துள்ளான். இவை அனைத்தும் மீட்கப்பட்டதுடன் கொள்ளையன் பயன்படுத்தி வந்த மகாராஷ்டிரா பதிவென் கொண்ட இன்னோவா காரும் மீட்கப்பட்டது.  
மேலும் விசாரணையில் இவன் மீது 2021 ஆம் ஆண்டு கேரளா பாலக்காடு மாவட்டம் பாலக்காடு கஸ்பா காவல் நிலையத்தில் மூன்று கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 18 ஆயிரம் பணத்தை வங்கியில் கொள்ளையடித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும் இவன் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரபிரதேஷ், கோவா , மத்தியபிரதேசம்  ஆகிய மாநிலங்களில் பல்வேறுபகுதிகளில் இன்னோவா காரில் பயணம் செய்து அப்பகுதிகளில் உள்ள பைனான்ஸ் கம்பெனிகள், கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வேவு பார்த்து வந்துள்ளான் என்ற விவரமும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :  வட மாநில நவீன கொள்ளையன் ஆலங்குளம் போலீஸாரால் கைது.

Share via