ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

by Staff / 27-05-2022 04:27:30pm
ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண போன்களுக்கு நிகராக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. தென்கொரிய தயாரிப்பான சாம்சங், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அதன்பிறகு, புதிய போன்கள் அனைத்தையும் ரூ.15,000க்கும் அதிகமாகவே விற்பனை செய்யவுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் உதிரபாகங்கள் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதன்காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 சாம்சங் தயாரிப்பு கூட்டாளியான டிக்சன், குறைந்த விலை போன்கள் தயாரிப்பை நிறுத்தவுள்ளது. குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via