சீமான் வீட்டு பாதுகாவலருக்கு ஜாமீன்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதுகாவலர் அமல்ராஜ் தனது துப்பாக்கி உரிமையை மீறியிருந்தால், அதன் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags :