பாலியல் வன்கொடுமை.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

by Editor / 24-03-2025 03:32:01pm
பாலியல் வன்கொடுமை.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க 23 வயது இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை (மார்ச்.22) இரவு ஐதராபாத்துக்கு புறநகர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணிடம் இளைஞன் ஒருவன் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளான். அவனிடமிருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via