காட்டு எருமை முட்டி 2 பேர் பலி

by Staff / 19-05-2023 01:47:05pm
காட்டு எருமை முட்டி 2 பேர் பலி

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் எருமேலியில் காட்டு எருமை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். கனமேலா பஹேல் சகோச்சன் (65) உயிரிழந்த நிலையில், பிளவனாகுழியில் தாமசி (60) என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த போது, அப்பகுதியில் ஓடி வந்த காட்டு எருமை முதியவரை முட்டித் தள்ளியது. அதே போல் மற்றொருவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இருவரையும் தாக்கிய காட்டெருமை காட்டுக்குள் ஓடியது. அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories